ஐரோப்பாவுக்குள் நுழைந்த குரங்கு அம்மை.. பிரான்சுக்குள் நுழையும் அபாயம்..?!
16 ஆவணி 2024 வெள்ளி 12:44 | பார்வைகள் : 3672
ஆபிரிக்க நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் குரங்கு அம்மை (Variole du singe) தற்போது ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை அடுத்து பிரான்சுக்குள்ளும் இந்த அம்மை நோய் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குரங்கு அம்மை எனப்படுவது ஒரு தொற்று நோய் ஆகும். தொடுதல், உடலுறவு, ஒரே ஆடைகளை அணிதல் போன்றவற்றால் ஒருவருக்கொருவர் பரவுகிறது. மிக ஆபத்தான தோல் வியாதிகளையும், தோல் அரிப்பு, காய்ச்சல், தலைவலி போன்றவற்றை ஏற்டுத்துகிறது. நீண்டகால நோயுடன் இருப்பவர்களுக்கு மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஆசிய நாடான பாக்கிஸ்தானில் கண்டறியப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் ஸ்வீடனில் இந்த குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பாவுக்குள் தொற்று நுழைந்ததை அடுத்து, பிரெஞ்சு மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்கும்படி பிரெஞ்சு சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.