Paristamil Navigation Paristamil advert login

'விடாமுயற்சி' அப்டேட் பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம்..!

'விடாமுயற்சி' அப்டேட்  பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம்..!

17 ஆவணி 2024 சனி 10:06 | பார்வைகள் : 3526


அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டை சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த அப்டேட்டை பார்த்து அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் தற்போது ஒரே நேரத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடந்த போது காலையில் மாலையில் என மாறி மாறி இரண்டு படங்களிலும் அஜித் நடித்து வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று முக்கிய அப்டேட் வெளியாக போவதாக சுரேஷ் சந்திரா அறிவித்த நிலையில் அந்த அறிவிப்பில் ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகர் நிகில் நாயர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை பார்த்து அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அஜித் சம்பந்தப்பட்ட அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல்லோருக்கும் தெரிந்த நிகில் நாயர் ’விடாமுயற்சி’ படத்தில் இணைகிறார் என்ற அப்டேட் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்