விருதுகளை வென்று குவிக்கும் தனுஷ் படங்கள்
16 ஆவணி 2024 வெள்ளி 15:17 | பார்வைகள் : 1241
பல நடிகர்களின் கனவாக இருக்கும், தேசிய விருதை நடிகர் முதல் முதலில் 'ஆடுகளம்' படத்திற்காக 58 வது தேசிய விருது விழாவில் வென்றார். இந்த திரைப்படம் சிறந்த இயக்குனர் ,சிறந்த ஸ்கிரீன் ப்ளே மற்றும் சிறந்த நடிகர் என மூன்று விருதை தட்டிச் சென்றது. வெற்றிமாறனும் இயக்கிய இந்த திரைப்படம் 2011-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்ஸி பண்ணு நடித்திருந்தார்.
இதன் பின்னர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் 'வெட்கை' என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்ட, 'அசுரன்'. படத்திற்காக இரண்டாவது தேசிய விருதை வென்றார். 55 வயது தக்க கிராமத்து மனிதர் கதாபாத்திரத்திலும், இளம் வயது கதாபாத்திரம் என இரண்டு தோற்றத்தில் நடித்து மிரள வைத்தார். அசுரன் படத்தில் தனுசுக்கு தனுஷுக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் அம்மு அபிராமி இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். தலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திறந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக 67 வது தேசிய விருதினை வென்றார் நடிகர் தனுஷ். மேலும் இப்படம் பெஸ்ட் பீச்சர் ஃபிலிம் இன் தமிழ் எங்கிற விருதையும் பெற்றது.
இதைத் தொடர்ந்து இன்று அறிவிக்கப்பட்ட 70 வது தேசிய திரைப்பட விருது விழாவில், தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் 2 விருதுகளை வென்றுள்ளது. நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், இப்படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே பாடலுக்கு நடனம் அமைத்த, நடன இயக்குனர்கள் ஜானகி மாஸ்டர் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனுஷ் நடித்தாலே கண்டிப்பாக அந்த படம் தரமான படமாக இருக்கும் தனுஷின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
நடிப்புக்காக மட்டும் இன்றி சிறந்த தயாரிப்பாளருக்காகவும், இரண்டு தேசிய விருதை பெற்றுள்ளார் தனுஷ். அதன்படி, 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான 'காக்கா முட்டை' திரைப்படத்தை தனுஷ் வெற்றிமாறனுடன் இணைந்து தயாரித்திருந்தார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, விக்னேஷ் - ரமேஷ் ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த விக்னேஷ் - ரமேஷ் இருவரும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றனர். மேலும் இந்த படம் பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.
அதே போல் விசாரணை படத்தை தயாரித்ததற்காக 63 வது, தேசிய விருது விழாவில் நடிகர் தனுஷ் தேசிய விருதை வென்றார். 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். தனுஷின் உண்டெர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியுடன் சேர்ந்து இந்த படத்தை தயாரித்தார். தினேஷ் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், ஆனந்தி கதாநாயகியாக நடித்திருந்தார். சமுத்திரக்கனி, முருகதாஸ், கிஷோர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 63வது தேசிய விருது விழாவில் இப்படம் சிறந்த பீச்சர் ஃபிலிம் இன் தமிழ், பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டராக சமுத்திரக்கனிக்கும், சிறந்த எடிட்டிங் காண விருது கிஷோர் டி என்பவருக்கும் வழங்கப்பட்டது.