Paristamil Navigation Paristamil advert login

அமேசான் வனப்பகுதியில் விமான விபத்து - 5 பேர் பலி

அமேசான் வனப்பகுதியில் விமான விபத்து - 5 பேர் பலி

17 ஆவணி 2024 சனி 16:20 | பார்வைகள் : 1028


அமேசான் வனப்பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து வெடித்து சிதறிய சம்பவத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசிலில் உள்ள மடோ கிராஸ்ரோ மாகாணம் அமேசானியன் நகரிலிருந்து ராண்டனொபொலிஸ் நகருக்கு 15-08-2024 சிறிய ரக விமானம் புறப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் மொத்தம் 5 பேர் பயணித்துள்ளனர்.

விமானம் அமேசான் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், தரையில் விழுந்த சில விநாடிகளில் விமானம் முழுவதும் தீ பற்றி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர்களில் அர்மின் ஸ்பிரிங்ஸ் என்ற தொழிலதிபர் அவரது 2 பேரன்களும் அடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய அதிகாரிகள் விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்