ஒலிம்பிக் போட்டிகளின் போது Vélib சேவைகளில் 2.5 பயணங்கள் பதிவு.!

17 ஆவணி 2024 சனி 20:32 | பார்வைகள் : 5544
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற இரு வாரங்களிலும் Vélib மிதிவண்டி வாடகை நிறுவனத்தில் மொத்தமாக 2.5 பயணங்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மிகப்பெரிய வெற்றி எனவும், பரிசுக்கு வருகை தந்த பலர் வாடகை மிதிவண்டிகளைப் பயன்படுத்தியிருந்தார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Vélib நிறுவனம் சென்ற வருடம் மொத்தமாக 1.9 மில்லியன் பயணங்கள் பதிவான நிலையில், இந்த 15 நாட்களில் மட்டும் 2.5 பயணங்கள் பதிவானமை பெரும் இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரத்யேகமாக பல நிலையங்களையும், தரிப்பிடங்களையும் Vélib நிறுவனம் உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.