Paristamil Navigation Paristamil advert login

யாழில் காலை கூட்டத்தில் மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு!

யாழில் காலை கூட்டத்தில் மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு!

18 ஆவணி 2024 ஞாயிறு 06:09 | பார்வைகள் : 5218


யாழில் பாடசாலையின் காலை கூட்டத்தின் போது மயங்கி விழுந்த ஆசிரியை ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். 

 
யாழ்ப்பாணம் - பலாலி வடக்கு கனிஷ்ட கல்லூரியில் பணியாற்றிய குறித்த ஆசிரியை பாடசாலையின் காலை கூட்டத்தின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். 
 
இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 
 
49 வயதுடைய குறித்த ஆசிரியைக்கு மூளையில் இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். 
 
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்