குரங்கம்மை நோய் குறித்து கனேடிய மருத்துவர்கள் எச்சரிக்கை
18 ஆவணி 2024 ஞாயிறு 08:52 | பார்வைகள் : 1322
ஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கம்மை நோய் தொற்று கனடாவிற்கும் பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்காவின் சில நாடுகளில் குரங்கம்மை நோய் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது.
இவ்வாறான ஒரு பின்னணியில் கனடாவில் இந்த நோய் பரவக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆபிரிக்காவுக்கு வெளியே பாகிஸ்தான் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் குரங்கம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கனடாவிற்கு சர்வதேச பயணிகள் வருகை தருவதும் பயணிப்பதும் அதிகமாக காணப்படுகின்றது என மருத்துவர் தெரிவிக்கின்றார்.
இதனால் கனடாவில் இந்த நோய் தொற்று பரவக்கூடிய அபாயத்தை மறுப்பதற்கில்லை என தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனம் குரங்குமை நோய் தொற்று அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.
குரங்கமை நோய் தொற்றானது கோவிட் 19 பெருந்தொற்று போன்று இலகுவில் பரவக்கூடியது அல்ல என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குரங்கமை நோயை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது அவதானமாக இருக்க வேண்டியது அவசியம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.