ரஷ்யாவின் 2வது பாலத்தின் மீது உக்ரைன் தீவிர தாக்குதல்
18 ஆவணி 2024 ஞாயிறு 13:47 | பார்வைகள் : 1650
ரஷ்ய உக்ரைன் போர் பல மாதங்களை தாண்டி நிறைவு பெறாது நீடித்து வருகின்றது.
உக்ரைன் நாட்டை விட்டு பல மக்கள் அண்டைய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்யாவின் குர்ஸ்க் நகரில் உள்ள இரண்டாவது பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனிய படைகள் தற்போது ரஷ்யாவிற்குள் புகுந்து Kursk பகுதியை தாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்ரைனிய படைகள் அமெரிக்கா அளித்துள்ள HIMARS ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்ய பிராந்தியத்தின் முக்கியமான பாலங்களில் ஒன்றை இரண்டாக உடைத்தெறிந்தது.
இந்த பாலம் உக்ரைன் வடக்கு எல்லைப் பகுதியில் 6.8 மைல் தொலைவில் இந்த பாலம் அமைந்துள்ளது.
ரஷ்ய பிராந்தியத்திற்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல் நடத்தி வருவது ஏற்கனவே சர்வதேச நாடுகள் மத்தியில் கவனம் பெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் Kursk பகுதியில் உள்ள 2வது பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனிய விமானப்படை தளபதி டெலிகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில், Zvannoe பகுதியில் Seym ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவது காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதல் மூலம் குர்ஸ்க் பகுதியில் ரஷ்ய படைகளின் தந்திரோபாய விநியோகம் தடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.