சூடானில் பதற்ற நிலை - 80 பேர் பலி
18 ஆவணி 2024 ஞாயிறு 15:08 | பார்வைகள் : 1581
சூடானில் போரால் பாதிக்கப்பட்ட தென்கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தில் துணை இராணுவப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னார் மாநிலத்தில் உள்ள ஜல்கினி கிராமத்தின் மீதே வியாழக்கிழமை காலை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த கிராமம் போரினால் பாதிக்கப்பட்டு 16 மாதங்கள் கடந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் போர் நிறுத்தப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகிறது.
சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இராணுவத்துடன் போரிட்டு வரும் துணை இராணுவ படை சென்னார் மாநிலத் தலைநகரான சின்ஜாவை ஜூன் மாதம் கைப்பற்றியது.
சின்னார் மாநிலத்தில் இடம்பெறும் தாக்குதல்கள் காரணமாக 725,000க்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சமீபத்திய ஐ.நா தரவுகளின்படி, சூடானிலிருந்து சுமார் 2.2 மில்லியன் மக்கள் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.