Saint-Denis : A1 நெடுஞ்சாலையில் எதிர் திசையில் பயணித்த மகிழுந்து..!

18 ஆவணி 2024 ஞாயிறு 16:04 | பார்வைகள் : 7044
A1 நெடுஞ்சாலையில் எதிர் திசையில் பயணித்த மகிழுந்து ஒன்று காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மகிழுந்து ஒன்று A1 நெடுஞ்சாலையில் வேகமாக பயணித்துள்ளது. காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்த குறித்த மகிழுந்தை காவல்துறையினர் துரத்திச் சென்றனர். வேகமாக பயணித்த குறித்த மகிழுந்து, திடீரென வீதியின் மறு பக்கம் சென்று, எதிர் திசையில் பயணித்தது.
Volkswagen Golf மகிழுந்து ஒன்றே இவ்வாறு தப்பிச் சென்று எதிர் திசையில் பயணித்துள்ளது. La Courneuve நகர் அருகே உள்ள Paul-Verlaine பகுதிக்கு அருகே மகிழுந்து திடீரென காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதியது.
பின்னர் மகிழுந்தைச் செலுத்திய நபர், மகிழுந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டபோதே அவர் 26 வயதுடைய பெண் ஒருவர் என தெரியவந்துள்ளது.
அவர் மது போதையில் இருந்ததாகவும், அவரது மதுபோதை அளவு சோதனையிடப்பட்டதுடன், அவர் காவல்நிலையத்துக்கு அழைத்தும் செல்லப்பட்டார்.