U19 மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டி அட்டவணை வெளியீடு

19 ஆவணி 2024 திங்கள் 07:44 | பார்வைகள் : 3207
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஐசிசி ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையின் மூலம் அட்டவணையை அறிவித்தது.
மலேசியாவில் நடைபெறும் இந்த போட்டி 2025 ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெறும்.
16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு பங்கேற்கின்றன.
குரூப் 'A' பிரிவில் நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்தியா, மலேசியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளை எதிர்கொள்கிறது.
குரூப் B பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா. 'C' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, சமோவா, தகுதிச்சுற்று அணிகளும், Dட' பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஸ்காட்லாந்து, தகுதிச்சுற்று அணிகளும் இடம் பெற்றுள்ளன.
போட்டியின் முதல் பதிப்பில் (2023), ஷஃபாலி வர்மா தலைமையிலான இளம் இந்திய அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.
இரண்டாவது பதிப்பில், இந்தியா வரும் ஜனவரி 19-ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியுடன் தங்கள் உலகக் கோப்பை வேட்டையைத் தொடங்கும்.