Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் கொவிட் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இழப்பீடு 

பிரித்தானியாவில் கொவிட் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இழப்பீடு 

20 ஆவணி 2024 செவ்வாய் 06:08 | பார்வைகள் : 1950


உலக நாடுகளை கடந்த 2020 ஆண்டு கொவிட் தொற்றானது அச்சுறுத்தியது, கொவிட் தொற்றை தடுக்க கொவிட் தடுப்பூசிகள் மக்களிடையே செலுத்தப்பட்டது.

இந்நிலையில் பிரித்தானியாவில், கொவிட் தடுப்பூசியால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவருக்குமே இழப்பீடு வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில், கொவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு பல்வேறு பதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பக்கவாதம், மாரடைப்பு, ஆபத்தான இரத்தக்கட்டிகள் தண்டுவட பாதிப்பு, ஊசி போட்ட கைகளில் அதீத வீக்கம் மற்றும் முக பக்கவாதம் முதலான பாதிப்புகளை சில தடுப்பூசிகள் ஏற்படுத்தியுள்ளன.

பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கானோர் கோவிட் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டு இழப்பீடு கோரிய நிலையில், அவர்களில் 14,000 பேர் இழப்பீடு கோரியுள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், பக்கவாதம், மாரடைப்பு, ஆபத்தான இரத்தக்கட்டிகள் தண்டுவட பாதிப்பு போன்ற கடுமையான பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.


கொவிட் தடுப்பூசி பெற்றவர்களில், ஆஸ்ட்ராஜெனகா நிறுவன தடுப்பூசி பெற்றவர்களே 97 சதவிகிதம் அளவுக்கு பாதிக்கப்பட்டு இழப்பீடு பெற்றுள்ளார்கள்.

ஆனால், மற்றவர்கள், போதுமான அளவில் பாதிக்கப்படவில்லை என கூறி, அவர்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ராஜெனகா கோவிட் தடுப்பூசியால் இரத்தக்கட்டிகள் உருவாவதாக எச்சரிக்கப்பட்டதால், ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், நோர்வே, நெதர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் மற்றும் லாத்வியா ஆகிய நாடுகள் அந்த அந்த தடுப்பூசி வழங்குவதை நிறுத்திவிட்டன.

ஆனாலும், பிரித்தானிய அரசு மட்டும், தொடர்ந்து ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பரிந்துரைத்துவந்தது.

இழப்பீடு கோரியவர்களில் 175 பேர், அதாவது, வெறும் 2 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களுக்கே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், 5,500 பேரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 519 பேர், மருத்துவர்களால் பரிசோதிக்கப்படும் முன்பே நிராகரிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனால், தடுப்பூசியால் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கும் நிலையிலுள்ள, பிரபலங்கள் சிலர் கூட இழப்பீடு பெற போராடிவருகிறார்கள்.


இந்நிலையில், இழப்பீடு மறுக்கப்பட்டோர், மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்