Paristamil Navigation Paristamil advert login

 ஒரே ஓவரில் 39 ஓட்டங்கள் குவித்த டேரியஸ் விஸ்ஸர்!

 ஒரே ஓவரில் 39 ஓட்டங்கள் குவித்த டேரியஸ் விஸ்ஸர்!

20 ஆவணி 2024 செவ்வாய் 09:22 | பார்வைகள் : 538


யுவராஜ் சிங்கின் சாதனையை சமோவா தீவைச் சேர்ந்த வீரர் டேரியஸ் விஸ்ஸர் முறியடித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசி உலக சாதனை படைத்து இருந்தார்.

யுவராஜ் சிங் அந்த ஓவரில் மட்டும் 36 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு பெற்றுத் தந்தது.

இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் இந்த சாதனையை சமோவா தீவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டேரியஸ் விஸ்ஸர் முறியடித்துள்ளார்.

அவர் ஒரே ஓவரில் 9 பந்துகளை எதிர்கொண்டு(6,6,6,1NB,6,0,1NB,7NB,6) 39 ஓட்டங்கள் குவித்து அசத்தியுள்ளார்.

இந்த சாதனையை 2026ம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தகுதிச் சுற்றில் வனுவாட்டு-சமோவா தீவுகளுக்கு இடையிலான போட்டியின் போது நிகழ்த்தியுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்