Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட அசம்பாவிதம் இருவர் பலி

கனடாவில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட அசம்பாவிதம் இருவர் பலி

4 புரட்டாசி 2023 திங்கள் 10:26 | பார்வைகள் : 9436


கனடாவின் ஒட்டாவா நகரில் திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்ற்றுள்ளது.

இந்த திருமண நிகழ்வின் போது  துப்பாக்கிச் சூட்டு மேற்கொள்ளப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டாவாவின் கன்வென்ஷன் சென்டர் என்னும் பகுதிக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 26 வயதான முகமட் அலி மற்றும் 29 வயதான  சாத்தூர் ஆதி தாஹிர் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்