கமலா ஹரிஸை அமெரிக்க ஜனாதிபதி என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
21 ஆவணி 2024 புதன் 14:20 | பார்வைகள் : 1922
வாய் தவறி கமலா ஹரிஸை அமெரிக்க ஜனாதிபதி என்று கூறிவிட்டார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
அதை இறுகப் பிடித்துக்கொண்ட இணையவாசிகள், ட்ரம்பை வைத்து செய்துகொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய ட்ரம்ப், கமலா ஹரிஸ் இப்போது ஜனாதிபதி, அவர் ஜனாதிபதியாக விரும்புகிறார் என்று கூறிவிட்டார்.
அதாவது, கமலா ஹரிஸ் இப்போது துணை ஜனாதிபதி, அவர் ஜனாதிபதியாக விரும்புகிறார் என்று கூறுவதற்கு பதிலாக, மாற்றிச் சொல்லிவிட்ட ட்ரம்ப், உடனடியாக தன் தவறைத் திருத்திக்கொண்டார்.
ஆனால், இணையவாசிகள் விடுவார்களா? சமூக ஊடகமான எக்ஸில் அவரை வைத்து கடுமையாக கேலி செய்துவருகிறார்கள்.
ட்ரம்புக்கு வயதகிவிட்டது, அவர் தேர்தலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் ஒருவர்.
அவர் பேசுவதைப் பாருங்கள், அவரது பேச்சிலேயே அவரது தோல்வி தெரிகிறது. அவருக்கும் கமலாதான் ஜனாதிபதியாவார் என்பது தெரியும், அவரே அதை தன் வாயால் சொல்லத்தான் காத்திருக்கிறோம் என்கிறார் இன்னொருவர்.
மற்றொருவரோ, இப்போதாவது ட்ரம்ப் உண்மையை ஒத்துக்கொண்டாரே, அதுவே சந்தோஷம் என்று கூற, இன்னொருவர், தாத்தா போய் தூங்குங்கள் என்கிறார்.
நவம்பர் வரட்டும், தேர்தல் முடிந்ததும், சிறையில் உட்கார்ந்துகொண்டு இதையே தான் சொல்லிக்கொண்டிருக்கப்போகிறார் ட்ரம்ப் என்கிறார் ஒருவர்.