Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் மோசடி சம்பவங்கள் - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

கனடாவில் மோசடி சம்பவங்கள் - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

4 புரட்டாசி 2023 திங்கள் 10:37 | பார்வைகள் : 9035


கனடாவில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கான டிக்கெட் விற்பனை தொடர்பில் மோசடிகள் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் ஆட்டோவா பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரபல பப் இசை பாடகி டெய்லர் சிப்டின் ( Taylor Swift) இசை நிகழ்ச்சி கனடாவில் நடைபெற உள்ளது. 

இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் முற்றாக விற்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு பின்னணியில் இணைய வழியில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக கூறி சிலர் மக்களை ஏமாற்றி வருவதாகவும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டில் ஆறு இசை நிகழ்ச்சிகள் டொரன்டோவில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த இசை நிகழ்ச்சிக்காக டிக்கெட்களைக் கொள்வனவு செய்வதில் ரசிகர்கள் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிலர் இவ்வாறு டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்காக சுமார் 2000 டாலர்கள் வரையிலசெலவிட்டு ஏமாற்றமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மூன்று தினங்களில் மட்டும் போலி டிக்கெட்டுகளுக்காக பணத்தை செலுத்தி சுமார் 12000 டாலர்கள் வலையில் பணத்தை மக்கள் இழந்து உள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

முகநூல், மார்க்கெட் பிளேஸ் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக டிக்கெட் கொள்வனவு செய்யும் போது மோசடிகள் இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து டிக்கெட் விற்பனை செய்பவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  
 

வர்த்தக‌ விளம்பரங்கள்