Paristamil Navigation Paristamil advert login

வெளியேறிய 1,22,000 ரஷ்ய மக்கள் - ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

வெளியேறிய 1,22,000 ரஷ்ய மக்கள் - ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

21 ஆவணி 2024 புதன் 15:30 | பார்வைகள் : 3259


கிட்டத்தட்ட 1,22,000 மக்கள் ரஷ்ய எல்லை நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனிய படைகள் தற்போது சர்வதேச எல்லையை தாண்டி ரஷ்ய நகரான குர்ஸ்க் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வழங்கிய தகவலின் படி, ரஷ்ய பிராந்தியத்திற்குள் உக்ரைனிய படைகள் 1,250 சதுர கிலோ மீட்டர் தூரத்தையும், குர்ஸ்க் பகுதியில் 92 குடியிருப்புகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், குர்ஸ்க் பகுதியில் உக்ரைனிய படைகளின் ஊடுருவலை தொடர்ந்து எல்லை நகரங்களில் உள்ள 1,22,000 மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என ரஷ்ய அரசு ஊடகமான TASS தகவல் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ரஷ்ய படைகளும் உக்ரைனின் கிழக்கில் அமைந்துள்ள Pokrovsk மற்றும் Toretsk ஆகிய முலோபாய தளவாட பகுதிகளிலும் தீவிரமான முன்னேற்றத்தை அடைந்து வருகின்றன.

இதனை தொடர்ந்து இந்த இரு பகுதிகளிலும் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாள் தொடங்கியதில் இருந்து இதுவரை Pokrovsk பகுதியில் 34 போர் மோதல்களும், Toretsk பகுதியில் 14 போர் மோதல்களும் பதிவாகியிருப்பதாக உக்ரைனின் பொது அதிகாரி பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்