Paristamil Navigation Paristamil advert login

துப்பாக்கி எமோஜி எப்படியெல்லாம் மாறியிருக்கு? கவனம் ஈர்க்கும் எலான் மஸ்க் பதிவு

துப்பாக்கி எமோஜி எப்படியெல்லாம் மாறியிருக்கு? கவனம் ஈர்க்கும் எலான் மஸ்க் பதிவு

22 ஆவணி 2024 வியாழன் 10:05 | பார்வைகள் : 3537


உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவர் எலான் மஸ்க். எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிடுதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், சமீபத்திய பதிவு ஒன்றில் எலான் மஸ்க் துப்பாக்கி எமோஜி சமூக வலைதளங்களில் எந்த அளவுக்கு மாறி இருக்கின்றன என்பதை விளக்குகிறது.

இது தொடர்பாக அவர் துப்பாக்கி எமோஜி கடந்த 2013 முதல் தற்போதைய 2024 ஆண்டு வரை எந்த அளவுக்கு மாறி இருக்கிறது என்பதை விளக்கும் படமும், அத்துடன் "துப்பாக்கி எமோஜிக்கள் மாறிக் கொண்டே வருவது தூக்கத்தை கெடுக்கும் மூளை வைரஸுடன் ஒத்துப்போகிறது, ஒரு முக்கிய கோட்பாடு போலியான தீங்கை உண்மையான தீங்குடன் சமன்படுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

எலான் மஸ்க்-இன் இந்த பதிவுக்கு ஒருத்தர், "துப்பாக்கி எமோஜியை நீக்கிவிட்டு, அதிபயங்கர ஆயுதங்களுடன் வெடி குண்டு எமோஜியை அவர்கள் மாற்றிய விதம் எனக்கு பிடித்திருந்தது," என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவவர், "நவீனத்துவத்தை தவிர்த்துவிட்டு, பழைய பாரம்பரியத்திற்கு திரும்ப வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் துப்பாக்கி எமோஜி ஆரஞ்சு நிற தண்ணீர் துப்பாக்கியாக இருந்து உண்மையான கைப்பாக்கியாக கடந்த ஜூலை மாதம் தான் மாற்றப்பட்டது. 

திடீரென ஏன் இப்படி மாற்றப்பட்டது என்பது குறித்து எக்ஸ் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்