■ சேபியா பயணமாகும் ஜனாதிபதி மக்ரோன்..!!

22 ஆவணி 2024 வியாழன் 18:00 | பார்வைகள் : 7862
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சேபியா (serbia) பயணிக்க உள்ளார்.
இம்மாதம் 29 மற்றும் 30 ஆகிய இரு நாட்களும் அவர் உத்தியோகபூர்வ அரச சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஐரோப்பாவின் தென் கிழக்கு பகுதியியைச் சேர்ந்த பால்கன் தீபகற்ப நாடுகளில் ஒன்றான சேபியாவுக்கு, முதன்முறையாக மக்ரோன் பயணிக்க உள்ளார்.
அங்கு சேபிய ஜனாதிபதி Aleksandar Vucic இனைச் சந்திக்க உள்ளார். இருவரும் பொருளாதாரம், சுகாதாரம், எரிசக்தி, கலாச்சாரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளாதாக எலிசே மாளிகை இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரலில் சேபிய ஜனாதிபதி Aleksandar Vucic பரிசுக்கு வருகை தந்து ஜனாதிபதி மக்ரோனைச் சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.