Paristamil Navigation Paristamil advert login

எக்கச்சக்க வசதிகள், ஏராளமான சென்சார்களுடன் அறிமுகமான கேலக்ஸி ரிங்

எக்கச்சக்க வசதிகள், ஏராளமான சென்சார்களுடன் அறிமுகமான கேலக்ஸி ரிங்

24 ஆவணி 2024 சனி 06:10 | பார்வைகள் : 1089


தினசரி நாம் செய்யும் உடற்பயிற்சிகளை கணக்கில் வைத்துக்கொள்வதற்கு தற்போது பலரால் ஆப்பிள் மற்றும் சாம்சங் கைக்கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக ஸ்மார்ட் ரிங்கை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இதன் விற்பனை வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

தினசரி ஆரோக்கியத்திற்காக வடிவமைக்கப்பட்ட கேலக்ஸி ரிங், சாம்சங்கின் மேம்பட்ட சென்சார் தொழில்நுட்பத்தை கச்சிதமான, விவேகமான வடிவத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் பிளாக், டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

இது 24 மணி நேரமும் உடல் நலன் கண்காணிப்பை வழங்குகிறது. 2.3 கிராம் மற்றும் 3.0 கிராம் வரை எடை கொண்டது. மேலும் ஒன்பது அளவுகளில் கிடைக்கிறது. 10ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதி கொண்டுள்ளது. இந்த ரிங்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.

இதய துடிப்பு, சுவாசம், உறக்கம், உடல் வெப்ப அளவு ஆகியவற்றை கணக்கிடும் வகையில் AI அல்காரிதம் கொண்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.33,404-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் ஹெல்த் ஆப் மூலம் இதயத் துடிப்பு விவரங்களைப் பயனர்களுக்கு ரியல்டைமில் தெரிவிக்கும் வசசதியை கேலக்ஸி ரிங் கொண்டிருக்கிறது. நிமிடத்திற்கான துடிப்புகள் மற்றும் கால அளவு போன்ற விரிவான அளவீடுகளுக்கான நேரடி இதயத் துடிப்பு சோதனையும் இதில் அடங்கும்.

கூடுதலாக, நடைபயிற்சி மற்றும் ஜாகிங்-ஐ கண்காணிப்பதற்கான ஆட்டோ ஒர்க்அவுட் கண்டறிதல், தினசரி உடற்பயிற்சி நினைவூட்டல்களுக்கான நோட்டிபிகேஷன் வழங்குகிறது. இதில் புகைப்படங்களை எடுப்பது அல்லது அலாரங்களை நிராகரிப்பது போன்ற செயல்பாடுகளுக்கான சைகை கட்டுப்பாடுகள் உள்ளன.

கேலக்ஸி ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி இந்த ரிங்-ஐ கண்டறிவதற்கான ஃபைண்ட் மை ரிங் அம்சம் இதில் உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்