பிற்பகலின் பின்னர் 24 மாவட்டங்களில் - சீரற்ற காலநிலை..!
24 ஆவணி 2024 சனி 13:47 | பார்வைகள் : 2981
இன்று ஓகஸ்ட் 24, சனிக்கிழமை பிற்பகலின் பின்னர் நாட்டில் சீரற்ற காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணியின் பின்னர் வேகமான புயற்காற்று வீசும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 110 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம் எனவும், சில இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை பதிவாகலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Ain, Allier, Ariège, Aveyron, Cantal, Côte-d'Or, Doubs, Haute-Garonne, Gers, Jura, Loire, Lot, Haute-Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Puy-de-Dôme, Hautes-Pyrénées, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Tarn, Tarn-et-Garonne மற்றும் Vosges ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்ஸ் மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிய முடிகிறது.