தெற்கு பிரான்சில் யூத தேவாலயம் தீக்கிரை.. பிரதமர் - உள்துறை அமைச்சர் விரைகின்றனர்..!
24 ஆவணி 2024 சனி 13:48 | பார்வைகள் : 3570
பிரான்சின் தெற்கு மாவட்டமான Hérault இல் உள்ள யூத தேவாலயம் ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது.
இன்று ஓகஸ்ட் 24, சனிக்கிழமை காலை இச்சம்பவம் La Grande-Motte (Hérault) நகரில் இடம்பெற்றுள்ளது. யூதர்களுக்கான வழிபாட்டுத்தலமான (synagogue ) இன்று காலை சில சமூகவிரோதிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. காலை 9 மணிக்கு இந்த தீ பரவல் ஏற்பட்டதாகவும், கட்டிடத்தின் இரண்டு கதவுகளும் முற்றாக சேதமடைந்ததாகவும், தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டு தீயை கட்டுப்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.
அதை அடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து யூத வழிபாட்டுத்தலங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் கப்ரியல் அத்தால் மற்றும் உள்துறை அமைச்சர் Gérald Darmanin ஆகிய இருவரும் சம்பவ இடத்துக்கு செல்ல உள்ளதாக அறிய முடிகிறது.