Paristamil Navigation Paristamil advert login

வங்காளதேசத்தில் கனமழை வெள்ளப்பெருக்கு... ! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

வங்காளதேசத்தில் கனமழை வெள்ளப்பெருக்கு... ! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

25 ஆவணி 2024 ஞாயிறு 08:34 | பார்வைகள் : 4315


வங்காளதேசத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 18 பேர் வரை  உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய எல்லைகளைத் தாண்டி மலைகளில் இருந்து நீர் பெருக்கம் மற்றும் கடுமையான பருவமழையால் தூண்டப்பட்ட வெள்ளத்தின் வங்காளதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள 11 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் வெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.  

வெள்ளத்தினால் பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால், பல தென் கிழக்கு மற்றும் வட மாவட்டங்களில் பொருட்களை வழங்க முடியாமல் அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

வெள்ளம் பல பிராந்தியங்களின் பரந்த நிலப்பரப்பில் வீடுகள் மற்றும் பயிர்களுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்