Paristamil Navigation Paristamil advert login

கனடாவில்  முதியவர்களை ஏமாற்றி மோசடிகள்.. பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

 கனடாவில்  முதியவர்களை ஏமாற்றி மோசடிகள்.. பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

25 ஆவணி 2024 ஞாயிறு 13:41 | பார்வைகள் : 985


கனடாவின் ரொறன்ரோவில் மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரொறன்ரோவில் முதியவர்களை ஏமாற்றி மோசடிகளில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பேரப்பிள்ளைகளுக்கு ஆபத்து எனக்கூறி இந்த பெண் முதியவர்களிடம் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றில் வங்கி அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி முதியவர்களிடம் வங்கி அட்டை விவரங்களை பெற்றுக்கொண்டு பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

குறித்த பின் சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண் தொடர்பிலான ஏதேனும் தகவல்கள் இருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த பெண் மேலும் பலரை ஏமாற்றி இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் முதியவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பிணை வழங்குவதற்கு இவ்வாறு வங்கியில் இருந்து வேறொரு நபரிடம் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கனடாவில் முதியவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்