மத்திய கிழக்கு நாடுகளில் மோதலை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கும் சுவிட்சர்லாந்து
26 ஆவணி 2024 திங்கள் 04:47 | பார்வைகள் : 2435
மத்திய கிழக்கு நாடுகளில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலைமைகளை அனைத்து தரப்பினரும் கைவிட வேண்டும் என சுவிட்சர்லாந்து கோரிக்கை விடுத்துள்ளது.
இணக்கப்பாடுகளின் மூலம் போர் நிறுத்தல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைய நாட்களாக நிலவிவரும் வன்முறை அதிகரிப்பு குறித்து மிகுந்த கரிசனை கொண்டுள்ளதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. ட்விட்டர் பதிவு மூலமும் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளது.
நிலைமைகளை மோசம் அடைய செய்யக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பேச்சு வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
லெபனானின் நிலை கொண்டுள்ள ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் இஸ்ரேலிய அரசாங்கமும் தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனானின் தென்பகுதியில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் பிராந்திய வலயத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு பின்னணியில் மோதல்களை தவிர்த்து இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு சுவிட்சர்லாந்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் கோரியுள்ளது.