Paristamil Navigation Paristamil advert login

கோடரியுடன் காத்திருந்த தாக்குதலாளி.. பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு..!

கோடரியுடன் காத்திருந்த தாக்குதலாளி.. பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு..!

26 ஆவணி 2024 திங்கள் 05:43 | பார்வைகள் : 7043


La Grande-Motte நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலம் மீது சனிக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் கதவுகள் மீது பெற்றோல் எறிகுண்டு வீசப்பட்டு கதவுகள் எரிக்கப்பட்டிருந்தன.

தாக்குதல் மேற்கொண்ட நபர் கதவினை எரியூட்டிவிட்டு கோடாரி ஒன்றுடன் வாசலில் காத்திருந்ததாகவும், வெளியே வரும் நபர்களை கோடரியால் தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார். 

காவல்துறையினரின் உடனடியான தலையீட்டினால் குறித்த தாக்குதலாளி தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

33 வயதுடைய குறித்த தாக்குதலாளி, அல்ஜீரியாவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்