டெலிகிராம் உரிமையாளர் கைது.. அரசியல் சதியா..?!
26 ஆவணி 2024 திங்கள் 14:53 | பார்வைகள் : 2643
டெலிகிராம் செயலியின் உரிமையாளரும், பில்லியனருமான Pavel Durov கைது செய்யப்பட்டிருந்தமை அறிந்ததே. ஆனால் அதன் பின்னனியில் அரசியல் சதி இருப்பதாக பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
Pavel Durov, இரஷ்ய-பிரான்ஸ் குடியுரிமை கொண்டவர் என்பதால், அரசியல் தலையீடுகள் இருக்கலாம் எனவும், பிரான்ஸ் இரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ளதால் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் எனவும் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அதனை மறுத்துள்ளார்.
இதில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் நீண்டகால விசாரணைகளும், வழக்கும் உள்ளதாகவும், இது முழுக்க முழுக்க நீதிமன்ற விசாரணைகள் தொடர்பானது எனவும், இதில் எந்த அரசியல் தலையீடுகளும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.