எரிபொருட்களின் விலை வீழ்ச்சி!
26 ஆவணி 2024 திங்கள் 17:26 | பார்வைகள் : 4013
எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதை அடுத்து, பிரான்சிலும் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போது டீசல் ஒரு லிட்டரின் விலை 1.6345 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு சதத்தினால் இந்த விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
95-E10 பெற்றோல் தற்போது 1.7515 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. கடந்தவாரத்தோடு ஒப்பிடுகையில் 1.1 சதவீதத்தால் குறைவாகும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை ஒரு கொள்கலன் (பரல்) 79.8 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகிறது. சென்ற வாரத்தோடு ஒப்பிடுகையில் இது 2.6 டொலர்களால் குறைவாகும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்தது போன்ற குறைந்த விலையில் தற்போது எரிபொருட்கள் விற்பனையாகிறதாகவும், இது மகிழ்ச்சியான செய்தி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.