மகரந்த ஒவ்வாமை.. 12 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!
28 ஆவணி 2024 புதன் 07:35 | பார்வைகள் : 2649
மகரந்த ஒவ்வாமை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுவாச நோய், கண் நோய், இருதய நோய் உள்ளவர்கள் அவதானமாக இருக்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு பகுதியைச் சேர்ந்த மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகரந்த துகள்கள் காற்றில் கலந்து சுவாசம் ஊடாக உடலுக்குள் நுழைவதாகவும், கண்களில் எரிச்சல் உண்டாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக காடுகளுக்கு நடுவே அல்லது அருகே உள்ள நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள், அதன் அருகே வசிப்பவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும் படி அறிவுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒவ்வாமையினால் ஆண்டு தோறும் 1 தொடக்கம் 3.5 வரையான மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இது 60 தொடக்கம் 180 மில்லியன் யூரோக்கள் மருத்துவச் செலவை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.