டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஸ்பெயின்
28 ஆவணி 2024 புதன் 07:56 | பார்வைகள் : 859
ஸ்பெயின் கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ICC ஆடவர் டி20 உலகக்கிண்ண துணைப் பிராந்திய ஐரோப்பா தகுதிச் சுற்றில், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் அணிகள் மோதிய போட்டி நடந்தது.
இப்போட்டியில் முதலில் ஆடிய கிரீஸ் (Greece) அணி 9 விக்கெட்டுக்கு 96 ஓட்டங்கள் எடுத்தது. சஜித் அப்ரிடி 27 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் ஆடிய ஸ்பெயின் அணி 13 ஓவர்களிலேயே 99 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹம்ஸா 32 (24) ஓட்டங்களும், முகமது இஹசான் 26 (16) ஓட்டங்களும் எடுத்தனர்.
இது ஸ்பெயின் அணி பெற்ற தொடர்ச்சியான 14வது வெற்றி ஆகும். இதன்மூலம் ஸ்பெயின் புதிய வரலாறு படைத்துள்ளது.
இதற்கு முன்பு 13 வெற்றிகளை பெற்று முதலிடத்தில் இருந்த மலேசியா மற்றும் பெர்முடா அணிகளின் சாதனையை ஸ்பெயின் முறியடித்தது.
நவம்பர் 2022யில் இருந்து நீட்டிக்கப்பட்ட ஆண்களுக்கான டி20 போட்டிகளில் ஸ்பெயின் எந்த தோல்வியும் அடையவில்லை.
Top 10 அணிகளில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 12 வெற்றிகளை பெற்றுள்ளன.
மகளிர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, 2018 முதல் 2019 வரை தொடர்ந்து 17 ஆட்டங்களில் தாய்லாந்து அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
ஆடவர் டி20யில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற அணிகள்
ஸ்பெயின் - 14
மலேசியா - 13
பெர்முடா - 13
ஆப்கானிஸ்தான் - 12
இந்தியா - 12
ரோமானியா - 12