ஹமாஸ் சுரங்கபாதையில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட முதல் பிணைக் கைதி -இஸ்ரேல் அதிரடி
28 ஆவணி 2024 புதன் 08:10 | பார்வைகள் : 3238
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி போர் தாக்குதல் ஆரம்பமாகியது.
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய எல்லை நகரத்தில் புகுந்து கிட்டத்தட்ட 250 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.
அதே நேரத்தில் இஸ்ரேலிய படைகள் நடத்திய ராணுவ நடவடிக்கையிலும் சிலர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் 326 நாட்கள் கடத்தலுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை கைத் ஃபர்ஹான் அல்காடி(Qaid Farhan Alkadi) என்ற பிணைக்கைதி தனி ஆளாக ஹமாஸின் சுரங்க பாதை அமைப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
ஹமாஸின் சுரங்கப்பாதை அமைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட 8 நபரும், உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்ட முதல் பிணைக்கைதியாக கைத் ஃபர்ஹான் அல்காடி வெளியேறியுள்ளார்.
உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு அல்காடி தன்னுடைய நன்றியை இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் உடன் நடந்த தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன் டஜன் கணக்கான மக்கள் பிணைக்கைதிகளாக இன்னும் பிடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்க தலைவர் அனைத்து வழிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மீட்பு குறித்து பேசிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant, கடந்த முறை நடந்தவற்றில் இருந்து பாடத்தை கற்றுக் கொண்டு, அதை இந்த முறை நடைமுறைப்படுத்தி கைத் ஃபர்ஹான் அல்காடியை ராணுவத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
கடந்த முறை 3 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் என கருதி இஸ்ரேலிய படைகள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.