Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கடவுச்சீட்டு தொடர்பில் வௌியான விசேட அறிவிப்பு

இலங்கையில் கடவுச்சீட்டு தொடர்பில் வௌியான விசேட அறிவிப்பு

28 ஆவணி 2024 புதன் 09:35 | பார்வைகள் : 1677


கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அரசாங்க அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று முதல் தினமும் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அருகில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல நாட்களாக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் நேற்று இரவை அதே இடத்தில் கழித்தனர்.

பல நாட்களாக இப்படியே தங்கி இருக்கும் மக்களுக்கு டோக்கன்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குடிவரவுத் திணைக்களம் வசம் வைத்திருக்கும் வெற்று  கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், குடிவரவு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இவ்வாறு வரிசை உருவானது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படும் வரை ஒக்டோபர் மாதம் வரையில் இந்நிலை நீடிப்பதால் அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அந்த திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், அந்த கோரிக்கைகளை மீறி இன்று காலை அதிகமானோர் அந்த இடத்திற்கு வருகை தந்தவாரு உள்ளனர்.

இன்று முதல் நாளாந்தம் 1000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அத தெரண இன்று வினவிய போது குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்