■ சேபியா பயணமாகும் ஜனாதிபதி மக்ரோன்!

29 ஆவணி 2024 வியாழன் 06:55 | பார்வைகள் : 10582
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று சேபியா (Serbia) செல்கிறார். இரண்டு நாட்கள் அரசபயணமாக அவர் இன்று நண்பகலின் பின்னர் புறப்பட உள்ளார்.
சேபிய குடியரசு தலைவர் Aleksandar Vučić இனை நாளை வெள்ளிக்கிழமை காலை சந்திக்கிறார். இரு நாட்டு தலைவர்களும் பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பொருளாதார ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாட உள்ளனர். மிக குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொடர்பில் உரையாட உள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் பிரான்ஸ் ‘செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டை நடத்தவுள்ளது. அதன் ஒரு அங்கமாக இந்த சந்திப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இன்று காலை எலிசே மாளிகையில் இரண்டு சந்திப்புக்கள் இடம்பெற உள்ளன. புதிய பிரதமர் தொடர்பில் மக்ரோன் அரச கட்சி தலைவர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று காலை 8.45 மணிக்கு சோசலிச கட்சியைச் சேர்ந்த Carole Delga மற்றும் ஜனாதிபதி கட்சியைச் சேர்ந்த Renaud Muselier ஆகிய இருவரையும், முற்பகல் 11 மணிக்கு பிரெஞ்சு நகரபிதாக்களின் குழுத்தலைவரும் ரீபபுளிகன் கட்சியைச் சேந்தவருமான David Lisnard இனையும் சந்திக்கிறார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1