Paristamil Navigation Paristamil advert login

மக்ரோனுக்கு எதிராக குற்றச்சாட்டு பிரேரணை! - மக்கள் ஆதரவு..??!!

மக்ரோனுக்கு எதிராக குற்றச்சாட்டு பிரேரணை! - மக்கள் ஆதரவு..??!!

29 ஆவணி 2024 வியாழன் 08:53 | பார்வைகள் : 2479


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீது தீவிர இடதுசாரி கட்சியான La France Insoumise குற்றப்பிரேரணை (motion de destitution) கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

49% சதவீதமான மக்கள் இந்த முடிவு சரி எனவும், தமது ஆதரவு அதற்கு உண்டு எனவும் வாக்களித்துள்ளனர். 50% சதவீதமானவர்கள் ‘முடிவு தவறு எனவும், தமது ஆதரவு அதற்கு இல்லை’ எனவும் வாக்களித்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பினை Elabe நிறுவனம் BFMTV தொலைக்காட்சிகாக மேற்கொண்டிருந்தது. அதன் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டிருந்தன.

கடந்த காலங்களில் நாம் 49.3 எனும் அரசியலமைப்பு சட்டம் தொடர்பில் அறிந்திருந்தோம். தற்போது அரசியலமைப்புச் சட்டம் பிரபலமடைந்துள்ளது. அரச தலைவர் ஒருவர் தனது கடமைகளை மீறி செயற்பட்டால் அவர் மீது இந்த Article 68 அரசியலமைப்புச் சட்டத்தினால், பதவி நீக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அதனையே  La France Insoumise கட்சி கையில் எடுத்துள்ளது.

பொது தேர்தல் இடம்பெற்று ஒரு மாதத்துக்கும் மேல் கடந்துள்ள நிலையில், புதிய பிரதமரை அறிவித்து அரசாங்கத்தை அமைப்பதில் ஜனாதிபதி மக்ரோன் மிகவும் காலதாமதம் செய்வதாகவும், இலகுவாக எடுக்க வேண்டிய முடிவினை வேண்டுமென்று காலம் தாழ்த்துவதாகவும் La France insoumise கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்