Paristamil Navigation Paristamil advert login

இஸ்லாமிய மதகுருவும் அவரது மகனும் கைது.. ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்!

இஸ்லாமிய மதகுருவும் அவரது மகனும் கைது.. ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்!

29 ஆவணி 2024 வியாழன் 16:38 | பார்வைகள் : 5970


Marseille நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் இமாம் (இஸ்லாமிய மதகுரு) ஒருவரும் அவரது 19 வயதுடைய மகன் ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று குறித்த இமாம், உள்ளூர் காவல்நிலையத்துக்குச் சென்று ’தமது வீட்டில் போதைப்பொருள்’ இருப்பதாக தெரிவித்துள்ளார். அதை அடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். வீட்டுக்குள் நுழைய முற்பட்டபோது, அவரது 19 வயதுடைய மகன் வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரது வீடு சோதனையிடப்பட்டபோது, வீட்டில் 1 கிலோ கஞ்சா போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. விசாரணைகளில் இமாமின் மகன்  அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர் என தெரியவந்தது.

அதையடுத்து தந்தை மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்