பிரான்சில் வசிக்கும் குடியேற்றவாதிகளில் இரண்டில் ஒருவர் ஆபிரிக்காவச் சேர்ந்தவர்!

29 ஆவணி 2024 வியாழன் 19:01 | பார்வைகள் : 6549
2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி பிரான்சில் 3.5 மில்லியன் குடியேற்றவாதிகள் வசிக்கின்றனர். இவர்களில் இரண்டில் ஒருவர் ஆபிரிக்காவில் பிறந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று ஓகஸ்ட் 29 ஆம் திகதி வியாழக்கிழமை வெளியான தரவுகளின் படி, பிரான்சில் வசிக்கும் குடியேற்றவாதிகளில் 48% சதவீதமானர்கள் அல்ஜீரியா, மொரோக்கோ, துனிசியா போன்ற ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 24% சதவீதமானவர்கள் கல்விக்காகவும், 23% சதவீதமானவர்கள் தொழிவாய்ப்பைத் தேடி வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மொத்தமாக 3.5 மில்லியன் குடியேற்றவாதிகள் பிரான்சில் வசிப்பதாகவும், அவர்களில் 1 மில்லியன் பேர் இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், சீனா போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி தகவல்களை INSEE எனும் கருத்துக்கணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.