ஜப்பானில் தொடரும் சீரற்ற காலநிலை - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
30 ஆவணி 2024 வெள்ளி 09:31 | பார்வைகள் : 2290
ஜப்பானில் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
ஜப்பானின் தென்மேற்குப் பகுதியை ஷன்ஷான் சூறாவளி தாக்கியது. இதன் காரணமாக மணித்தியாலத்திற்கு 252 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன், பலத்த மழை பெய்த நிலையில், பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.