Paristamil Navigation Paristamil advert login

டெலிகிராம் உரிமையாளருக்கு குடியுரிமை நீக்கமா..? - ஜனாதிபதி பதில்..!

டெலிகிராம் உரிமையாளருக்கு குடியுரிமை நீக்கமா..? - ஜனாதிபதி பதில்..!

31 ஆவணி 2024 சனி 06:29 | பார்வைகள் : 4943


டெலிகிராம் செயலியின் உரிமையாளர்  Pavel Durov இரஷ்ய மற்றும் பிரெஞ்சுக் குடியுரிமை கொண்டவராவார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பட்ட நிலையில் கடந்தவாரத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவருக்கான பிரெஞ்சுக் குடியுரிமை நீக்கப்படுமா எனும் கேள்வி வலுத்துள்ளது. இந்த கேள்விக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சேபியாவில் வைத்து பதிலளித்துள்ளார். அவரது குடியுரிமை பறிக்கப்படமாட்டாது எனவும், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், தொழிலதிபர்கள் போன்ற 'உயர் அடையாளங்களை' கொண்ட நபர்களை ஒருபோதும் பிரான்ஸ் இழக்க விரும்பாது. அவரகள் பிரெஞ்சு கற்பதும், நாட்டுக்குத் தேவையான செல்வங்களை ஈட்டித்தரும் ஒரு சந்தர்ப்பத்தை தவறவிடாது!' என மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை, அவர் பிரான்சுக்கு ரகசியமாக வந்தது ஜனாதிபதி மக்ரோனைச் சந்திக்க என கனார் (Le Canard enchaîné) பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியினை மக்ரோன் மறுத்துள்ளார். 'நான் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை!' என அவர் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்