Paristamil Navigation Paristamil advert login

சென் நதியில் இன்று ட்ரயதலோன் போட்டிகள் இரத்து..!

சென் நதியில் இன்று ட்ரயதலோன் போட்டிகள் இரத்து..!

1 புரட்டாசி 2024 ஞாயிறு 06:32 | பார்வைகள் : 1171


மூன்று வெவ்வேறு விதமான போட்டிகளை ஒன்றிணைந்த ட்ரயத்தலோன் போட்டி ஒன்று சென் நதியில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. 

750 மீற்றர் தூரத்துக்கு நீச்சலும், 20 கி.மீ தூரத்துக்கு மிதிவண்டியும், 5 கிலோமீற்றர் ஓட்டமும் என மூன்று விளையாட்டுக்களிலும் தொடர்ச்சியாக ஈடுபடவேண்டும். இந்த ட்ரயதலோன் போட்டிக்காக சென் நதி தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தண்ணீர் மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு, போட்டி பிற்போடப்பட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை போட்டிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளின் போது சென் நதியில் திட்டமிடப்பட்டிருந்த பல போட்டிகள் தண்ணீர் மாசடைவு காரணமாக பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்