ஈஃபிள் : போட்டிகளின் பின்னரும் காட்சிப்படுத்தப்படும் - ஒலிம்பிக் வளையங்கள்..!

1 புரட்டாசி 2024 ஞாயிறு 08:59 | பார்வைகள் : 4404
‘பரிஸ் 2024’ போட்டிகளுக்காக ஈஃபிள் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் வளையங்கள் போட்டி நிறைவடைந்ததன் பின்னரும் காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இதனை நேற்று ஒகஸ்ட் 31 ஆம் திகதி அறிவித்தார். ‘ஒலிம்பிக் வளையங்கள் ஈஃபிள் கோபுரத்தில் தொடர்ந்தும் இருக்கும்’ என அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், தற்போது உள்ள அதே அளவில் இருக்குமா என்பது தொடர்பில் தெரிவிக்கவில்லை. தற்போது அமைக்கப்பட்டுள்ள வளையங்கள் அதிக நிறை கொண்டது எனவும், அதன் அளவுகள் மாற்றப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எதுவாகினும் ’பரிஸ் 2024’ ஒலிம்பிக்கை ஞாபகப்படுத்தும் வளையில் ஒலிம்பிக் வளையங்கள் அமைந்திருக்கும் என அவர் தெரிவித்தார்.
Ouest-France ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனை அவர் தெரிவித்திருந்தார்.