Paristamil Navigation Paristamil advert login

யார் பிரதமர் இடதுசாரி Bernard Cazeneuve அவர்களா? வலதுசாரி Xavier Bertrand அவர்களா?.

யார் பிரதமர் இடதுசாரி Bernard Cazeneuve அவர்களா? வலதுசாரி Xavier Bertrand அவர்களா?.

2 புரட்டாசி 2024 திங்கள் 06:16 | பார்வைகள் : 3596


நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஏறத்தாழ 55 நாட்கள் கடந்த நிலையில் அரசதலைவர் Emmanuel Macron அவர்கள் இன்னும் புதிய பிரதமரையும், அவர் தலைமையிலான புதிய அரசாங்கத்தையும் அமைக்காது தொடர்ந்து பலதரப்பட்ட அரசியல் கட்சிகள், ஆளுமைகள், கட்டமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறார். 

அதன் அடுத்த கட்டச் சந்திப்பாக இன்று (02/09) இடதுசாரியும் முன்னாள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், குறைந்த காலம் பிரதமர் போன்ற பதவிகளை வகுத்த Bernard Cazeneuve அவர்களையும், முன்னாள் சுகாதார அமைச்சு மற்றும் தொழில்துறை அமைச்சுப் பதவிகளை வகித்த வலதுசாரியான Xavier Bertrand அவர்களையும் அரசதலைவர் மாளிகையில் சந்திக்கிறார். அதன் பின்னர் முன்னாள் வலதுசாரி அரசதலைவரான Nicolas Sarkozy அவர்களையும், முன்னாள் இடதுசாரி அரசதலைவரான François Hollande அவர்களையும் சந்திக்கிறார் என அரச மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே புதிய பிரதமரை தெரிவுசெய்யும் கடைசி சந்திப்பாக அமையலாம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறு இருக்க பெரும்பான்மை பெறாவிட்டாலும், அதிக ஆசனங்களை தமதாக்கி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற Nouveau Front Populaire கட்சியினர் தாங்கள் முன்மொழிந்த Lucie Castets அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தை புறம் தள்ளி எந்த அரசாங்கத்தையும் அரசதலைவர் அமைத்தாலும் அந்த அரசாங்கம் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதனைக் கவிழ்ப்போம் என தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்