தரிப்பிடக்கட்டணம் அதிகரிப்பு!

2 புரட்டாசி 2024 திங்கள் 07:27 | பார்வைகள் : 5543
தலைநகர் பரிசில் SUV வாகனங்களுக்கான தரிப்பிடக்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று செப்டம்பர் 1 ஆம் திகதியில் இருந்து இந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1.6 தொன் எடைக்கு மேற்பட்ட SUV வாகனங்களுக்கும் மற்றும் 2 தொன் எடைக்கு மேற்பட்ட ஹைபிரிட் வாகனங்களுக்கும் (véhicules hybrides) இந்த கட்டண அதிகரிப்புக்கு உள்ளாகின்றன.
எவ்வாறாயினும், இந்த கட்டண அதிகரிப்பு பரிசில் வசிப்பவர்கள் அல்லாத வெளியில் இருந்து வருகை தருபவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதேவேளை, மாற்றுத்திறனாளி சாரதிகளுக்கும் கட்டண உயர்வு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.