■ குடியேற்றவாதிகள் தொடர்பில் புதிய சட்டம்..!!
2 புரட்டாசி 2024 திங்கள் 09:01 | பார்வைகள் : 5009
பிரெஞ்சு குடியுரிமை அல்லாத குடியேற்றவாதிகளை பணிக்கு அமர்த்தும் போது கவனிக்கவேண்டிய சில புதிய சட்டங்களை அரசு அறிவித்துள்ளது.
குடியேற்றவாதிகளை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், அவரிடம் வேலைக்காக அனுமதி பத்திரம் (les autorisations de travail) இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்பது அறிந்ததே. இந்நிலையில், பணிக்கு அமர்த்தப்படும் நபர் இந்த செப்டம்பர் 1 ஆம் திகதியில் இருந்து ’அனுமதி பத்திரம் இல்லாத வேலைகளில் ஈடுபட்டமைக்காக தண்டிக்கப்படாத ஒருவராக இருத்தல் கட்டாயமானதாகும்.
அதேவேளை, நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவராகவோ, சட்டவிரோதமாக வசிப்பவராகவோ, அவர் வைத்திருக்கும் ஆவணம் மோசடி மூலம் பெறாதவராகவோ இருக்கின்றாரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட விதிகளை மீறி பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது குற்றப்பணம் அறவிடப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.