Paristamil Navigation Paristamil advert login

€19 யூரோக்களுக்கு Ouigo பயணச்சிட்டை.. - முந்துங்கள்!

€19 யூரோக்களுக்கு Ouigo பயணச்சிட்டை.. - முந்துங்கள்!

2 புரட்டாசி 2024 திங்கள் 11:01 | பார்வைகள் : 7413


19 யூரோக்களுக்கு Ouigo பயணச்சிட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதி ஒன்றினை SNCF அறிவித்துள்ளது.

மொத்தமாக 200,000 பயணச்சிட்டைகள் விற்பனைக்கு விடப்பட உள்ளன. செப்டம்பர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இந்த விற்பனை இடம்பெறும் எனவும், 200,000 பயணச்சிட்டைகள் விற்பனையானவுடன் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணச்சிட்டைகளை இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குட்பட்ட எந்த நாட்களிலும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் எந்த ஒரு நகருக்கு பயணிக்கும் Ouigo தொடருந்திலும் €19 யூரோக்களுக்கு பயணிக்க முடியும் எனவும், நுழைவுச் சிட்டையை பெற்றுக்கொள்ள முந்துங்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்