பரிஸ் நகரமும் Cabaret நடனமும்!
14 மார்கழி 2021 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 55649
இன்றைய பிரெஞ்சு புதினத்தில்… பரிசில் மிக பிரபலமான காபரே நடனம் குறித்து பார்க்கலாம். அதிகபட்ச திறமையாளர்கள் ஒன்றிணையும் பெரும் சங்கமங்கள் இங்கு அரங்கேறுகின்றன.
கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் அனுமதிக்கப்படும் இந்த Cabaret நடனங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. உல்லாச விரும்பிகள், பெரும் பணக்காரர்கள் என அனைவரும் ஒன்றிணையும் கூடாரமாக இந்த Cabaret அரங்குகள் உள்ளன.
இந்த Cabaret குழுக்களில் மிக பிரபலமானது Le Crazy Horse எனும் குழுவாகும். இந்த குழுவுக்கு 65 ஆண்டுகால அனுபவம் உள்ளது. 90 நிமிடங்கள் நீடிக்கும் இந்த நடனத்தில் அரை மற்றும் முழு நிர்வாண நடனங்கள் உண்டு.
Le Lido எனும் குழுவுக்கு விளம்பரமே தேவையில்லை. உலகம் முழுவதும் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட நடன அழகிகளை கொண்டு மிக பிரம்மாண்டமான அரங்கில் நடனம் புரிகின்றனர். பல்வேறு சமாச்சாரங்களை கொண்ட விளையாட்டுக்களும் இங்கு பிரபலம். அத்தனையும் எழுத்தில் விபரிக்க முடியாதில்லையா..?? கூட்டம் பிச்சுக்கும்!
Moulin Rouge எனும் சிவப்பு அரங்கு அவ்வப்போது உங்கள் கண்களில் தட்டுப்படுவது தான். இங்கு கிட்டத்தட்ட 1889 ஆம் ஆண்டில் Cabaret நடனம் இடம்பெறுகின்றது. 80 சர்வதேச கலைஞர்கள், 1000 வடிவிலான ஆடைகள், 80 இசைக்கலைஞர்கள், 60 பாடகர்கள், மீன் அருங்காட்சியகம் என இந்த அரங்கு உலக பிரசித்தி பெற்றது.
Paradis Latin அரங்கும் மிக பிரபலமான ஒன்று தான். ஈஃபிள் கோபுரத்துக்கு அருகே உள் இந்த அரங்கு மிக மென்மையான சாதுவான நடனங்களுக்கு பிரசித்தி பெற்றது. அமைதியும், கலையும் இரசிக்க இதைவிட்டால் வேறு அரங்கு இல்லை.
இப்படி பரிசில் மிக பிரபலமான Cabaret குழுக்களும் அரங்குகளும் உள்ளன. கொரோனா சூழ்நிலை காரணமாக தற்போது காட்சிகள் பல இரத்துச் செய்யப்பட்டாலும்,… சில வருடங்களுக்கு முன்னர் வரை தினமும் காட்சிகள் அரங்கேற்றப்படுவதுடன்.. வசூல் மழையும் கொட்டித்தீர்த்தது.
சுபம்.