Seine-Saint-Denis : தேவாலயத்தில் கொள்ளை - நன்கொடையாக வழங்கப்பட்ட பணம் மாயம்..!

2 புரட்டாசி 2024 திங்கள் 15:01 | பார்வைகள் : 6182
Livry-Gargan (Seine-Saint-Denis) நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தேவாலயத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணம், கொள்ளையிடப்பட்டுள்ளது.
அங்குள்ள Saint-Michel-de-Gargan தேவாலயத்தில் இக்கொள்ளைச் சம்பவம் நேற்ற்ய் செப்டம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பிராத்தனைக் கூட்டம் நிறைவடைந்த சில நிமிடங்களில் காலை 10.45 மணி அளவில் உள் நுழைந்த கொள்ளையர்கள் இந்த பணத்தினை சூறையாடிக்கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை இடம்பெற்றதை அறிந்துகொண்ட தேவாலயத்தின் பாதிரியார் உடனடியாக காவல்துறையினரை அழைத்துள்ளார். Livry-Gargan நகர காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.