Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பு பகிரங்க மிரட்டல் 

இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பு பகிரங்க மிரட்டல் 

3 புரட்டாசி 2024 செவ்வாய் 08:17 | பார்வைகள் : 2784


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கானோர் பலியானதுடன் , 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதையடுத்து பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே பேச்சு வார்த்தை மூலம் 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவித்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர்.

இதற்கிடையே காசாவில் உள்ள ஹமாசின் சுரங்கப் பாதையில் பிணைக்கைதிகள் 6 பேரின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் மீட்டது. 

இதையடுத்து இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டங்கள் இஸ்ரேலில் வெடித்துள்ளது. பிணைக்கைதிகள் உயிரிழந்தமை தொடர்பில் பிரதமர் நெதன்யாகு கூறும்போது,

"6 பிணைக்கைதிகளையும் தலையின் பின்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு ஹமாஸ் அமைப்பினர் கொன்றுள்ளனர். 

அவர்களை உயிருடன் திரும்பக் கொண்டு வராததற்காக உங்களிடம் (மக்கள்) மன்னிப்பு கேட்கிறேன். 

இதற்கு ஹமாஸ் பெரும் விலை கொடுக்க நேரிடும்" என்றார்.

இதுகுறித்து ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேடா கூறும் போது, "பிணைக்கைதிகளை ராணுவ நடவடிக்கை மூலம் விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு தொடர்ந்து வலியுறுத்தினால் பிணைக்கைதிகள் சவப்பெட்டிகளுக்குள் அவர்களின் குடும்பங்களுக்குத் திரும்பி அனுப்பப்படுவார்கள் என்றார்.

இஸ்ரேல் ராணுவம் நெருங்கினால் பிணைக் கைதிகளை வைத்திருக்கும் போராளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கைதிகளின் பரிமாற்ற ஒப்பந்தத்தை வேண்டுமென்றே தடை செய்ததால் கைதிகளின் மரணத்திற்கு நெதன்யாகுவும், இஸ்ரேல் ராணுவமும்தான் முழு பொறுப்பு என்றும் கூறியுள்ளார்


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்