Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் மீது ரஷ்யா கொடூரத்  தாக்குதல் - 51 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா கொடூரத்  தாக்குதல் - 51 பேர் பலி

4 புரட்டாசி 2024 புதன் 08:06 | பார்வைகள் : 5485


உக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள பொல்டாவா நகரில் ரஷ்யா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டதுடன் 271 பேர் காயமடைந்துள்ளனர்.

இராணுவ நிறுவகம் ஒன்றின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் இதன்போது அருகிலிருந்த வைத்தியசாலை ஒன்றும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யுக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் 51 பேர் பலி | 51 People Were Killed Russia S Attack On Ukraine

தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்ட போதிலும் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு போதுமான நேரம் இருக்கவில்லை என யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலென்ஷ்கி, ரஷ்யாவுக்குப் பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நீண்டதூர ஏவுகணை தாக்குதல்களை நடத்தித் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வான் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்