Paristamil Navigation Paristamil advert login

மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களின் விற்பனை வீழ்ச்சி..!

மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களின் விற்பனை வீழ்ச்சி..!

4 புரட்டாசி 2024 புதன் 10:53 | பார்வைகள் : 1701


இல் து பிரான்சுக்குள் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் போன்ற இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்ற ஆண்டின் முதல் அரை ஆண்டோடு ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் அதே காலப்பகுதியில் இந்த விற்பனை 19% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. தரிப்பிடக்கட்டணங்கள், கட்டாயமாக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பரிசோதனை சான்றிதழ் போன்ற சட்டங்கள் காரணமாக இந்த விற்பனை வீழ்ச்சி பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சார மோட்டார் சைக்கிள்களின் (deux-roues électriques)  விற்பனையும் 14% சதவீதத்தால் வீழ்ச்சிகண்டுள்ளது.

பரிசின் சில பகுதிகளின் விற்பனை இன்னும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், 5 ஆம் வட்டாரத்தில் காட்சியறை வைத்திருக்கும் Boulmich'Moto நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் 35% சதவீத விற்பனை வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் கடந்த ஏப்ரல் முதல் மோட்டார் சைக்கிள்களுக்கு தொழில்நுட்ப சான்றிதழ் (le contrôle technique) கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்