Paristamil Navigation Paristamil advert login

நடிகர் Benoît Magimel வீட்டில் கொள்ளை.. அவரது மூன்று César விருதுகளும் மாயம்..!

நடிகர் Benoît Magimel  வீட்டில் கொள்ளை.. அவரது மூன்று César விருதுகளும் மாயம்..!

4 புரட்டாசி 2024 புதன் 16:09 | பார்வைகள் : 7628


பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள பிரெஞ்சு நடிகர் Benoît Magimel இன் வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளது. அவரது César விருதுகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் அங்கிருந்த 80,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 

அவர்கள் கொள்ளையிட்ட பொருட்களில் மூன்று César  விருதுகளும் இருந்ததாகவும், அவை கடந்த 2016, 2022, 2023 ஆம் ஆண்டுகளில் சிறந்த நடிகருக்காக அவருக்காக வழங்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது. 

கொள்ளையர்கள் மிக விரைவாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்